கோவை: கோவை போத்தனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என கருதி கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை போத்தனூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிலால்(68). ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான இவரது வீட்டில் கணேசன்(53) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், கணேசனின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தனது மனைவி பிரிந்து செல்வதற்கு மணிலால் காந்தி தான் காரணம் என நினைத்து கணேசன் அவர் மீது கோபத்தில்
இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மணிலால் காந்தி மீன் வாங்க வெளியே வந்தபோது, அங்கிருந்த கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிலால் காந்தியை குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து மணிலால் காந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கணேசனை சிறையில் அடைத்தனர்.