கோவையில் சாலையில் கிடைத்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நபர்கள்..! குவியும் பாராட்டு

கோவை: கோவையில் சாலையில் தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்களின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.


கோவை: கோவை கோட்டம் தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்கள் ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர்கள் கோவை மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலகத்தை அணுகி, கடந்த 27ம் தேதியன்று வால்பாறை சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்கு சோலையார் அணை பகுதியில் ஒரு பர்ஸ் கீழே கிடந்ததாக ஒப்படைத்தனர்.

அதில் சுமார் ரூ. 3,679 ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில் திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் அவருடைய நண்பரைப் பார்க்க வால்பாறை சென்றபோது, பர்ஸ் தொலைந்து விட்டதாகவும், தன்னுடைய பர்சை அவருடைய சகோதரர் அசோக் வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் அவர்கள் மேற்படி பர்சை அசோக் வசம் ஒப்படைத்தார். மேலும், ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...