திருப்பூரில் மின்தடை காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - சுப்பராயன்

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மாநில அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அதேபோல, அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டும் கூட அடிப்படை உள்கட்டமைப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை இச்சம்பவம் சுட்டிக் காட்டுவதாகவும், இச்சம்பவத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், தமிழக சுகாதாரத் துறையே நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதுபோல் செயலற்று கிடப்பதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மாநில அரசு நிர்வாகத் திறன் மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து போராட முடியாத சூழலில் இருப்பதாகவும், தமிழகத்தில் பாஜக திட்டமிட்டு ரவுடிகளையும் குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து, தேர்தல் நேரத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதேபோல, பொருளாதாரம் மற்றும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது என இரண்டிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ள சூழ்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி மத்திய அரசை வீழ்ச்சியடைய செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது மாநில அரசின் கையாளாகாத தனத்தை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...