நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 2 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, சதீசன் ஆகிய 10 பேர் ஆஜராகினர்.
அப்போது, இன்று 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு சாட்சி நேற்று வரை சாட்சி கூறுதாக இருந்த நிலையில், இன்று அவர் சாட்சி கூறுவதற்கு வராதது கடும் கண்டனத்துக்குரியது எனவும், அந்த சாட்சி ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகரின் சகோதரர் என்பதால் சாட்சியை இருட்டடிப்பு செய்வதாக எதிர்கட்சி வழக்கறிஞர் ஆனந்த் வாதத்தை முன் வைத்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வரும் 29ம் தேதியன்று 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி 29ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு கொரோனா தொற்று வர வேண்டும் என்பதற்காக கொரானா தொற்று இருந்த ஒரு காவலரை பாதுகாப்பிற்காக பணியமர்த்தியுள்ளதாக ஆனந்த் குற்றம் சாட்டினார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் ஆட்சேபனை தெரிவித்து கூறும் போது, மருத்துவ ரீதியில் அந்த காவலருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யவில்லை என்று கூறினார்.