கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நீதிமன்றத்தில் தடய அறிவியல் துறையினர் அறிக்கை தாக்கல்!

கோவை: கோவையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தான் வீசப்பட்டது என்பதை தடய அறிவியல் துறையினர் உறுதி செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தான் வீசப்பட்டது என்பதை தடய அறிவியல் துறையினர் உறுதி செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.



கோவை கணபதி அருகேயுள்ள வேதம்பாள் நகரில் ஹிதயதுல்லா முஸ்லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி வாசல் மீது கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்து பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில் மற்றும் பாண்டி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடய அறிவியல் துறையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பள்ளிவாசல் மீது வீசப்பட்டது பெட்ரோல் குண்டு தான் என்பதை தடய அறிவியல் துறையினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...