நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 3 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை நாளை (செப்., 24) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், மனோஜ், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோர் ஆஜராகினர்.
மேலும், தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள திபு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு சாட்சியின் பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த சாட்சியை விசாரிக்க எதிர் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை 24ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.