திருப்பூரில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு!

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின் தடையின் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின் தடையின் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைப்பிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், நேற்றைய தினம் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், மின்தடை ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு செல்ல கூடிய மின்சாரம் தடைபட்டது.

இதன் காரணமாக ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட தடையினால் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததாக புகார் எழுப்பப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அஜாக்கிரதையாக செயல்பட்ட கட்டுமான பொறியாளர் மற்றும் காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேலும் ஒருவர் மின் தடையின் காரணமாக நேற்று மாலை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்பவர் கடந்த 16ம் தேதி முதல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 21ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, நேற்றைய தினம் ஏற்பட்ட மின் தடையால் ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக நேற்று மாலை உயிரிழந்ததாகவும் அவரது இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கணவர் இல்லாமல் வாழ்ந்து வந்த அனுராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அனுராதாவின் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...