கோவை: அரசு போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முயற்சியை போக்குவரத்து கழகம் கைவிட வேண்டும், தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பயன்களை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி கோவை ரோடு - சிடிசி மேடு அருகே உள்ள பணிமனை கிளை 1 மற்றும் 2 ஆகிய இடங்களிலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிக பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்த ஊழியர்கள், அதிகாரிகள் இந்த போக்கை கைவிட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.