கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவில்லிபுத்தூருக்கு அதிமுக இளைஞரணி நிர்வாகி விஷ்ணுபிரபு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.

கோவையை செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனை நிர்வாகம் ஹெலிகாப்டர் சேவையினை சுற்றுலா மற்றும் சொந்த பயன்பாடுகளுக்கு வாடகைக்கு அளித்து வருகின்றது. சமீபத்தில் கோவையில் இந்த தனியார் ஹெலிகாப்டர் கட்டண சேவையானது துவங்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளரான இருக்கும் விஷ்ணுபிரபு என்பவர் ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார்.
வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு நடத்தவும், ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யவும் குடும்பத்துடன் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்துவிட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்ப விஷ்ணுபிரபு திட்டமிட்டுள்ளார்.
கட்டண சேவையான இந்த ஹெலிகாப்டர் புகைப்படங்கள் எடுக்கவும், சுற்றுலா செல்லவும் வாடகைக்கு விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.