சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு :கேரள அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு :கேரள அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவை: சிறுவாணி அணையின் முழு கொள்ளளவை எட்ட விடாமல், கேரள அரசு தண்ணீரைத் திறந்து விடுவது தொடர்பாக, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர் 6 பேர் நேற்று கேரள நீர்ப்பாசன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவையின் பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகள், வழித்தடத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டமானது 877.20 மீட்டராக உயர்ந்தது. அணை நிரம்ப மேலும் 1.65 மீட்டர் நீர்மட்டம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 45 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை அடைய விடாமல், கேரள அதிகாரிகள் 2 மீட்டர் வரை மீண்டும் தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டனர். 

இந்த வாரத்தில், அணை நிரம்பும் என எண்ணியிருந்த தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மத்தியில் கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று கேரள மாநிலம் சென்று, அம்மாநில நீர்ப்பாசன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,"கோவையில் இருந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிறுவாணி அணை முழுக் கொள்ளவை அடைந்த பிறகே, அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும். அணை நிரம்பும் முன்பாக தண்ணீர் திறக்கக் கூடாது, என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் கேரள அரசிடம் பேசி, பதிலளிப்பதாக தெரிவித்துள்ளனர்," என்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...