திருப்பூர்: 70 நாட்களில் 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும், என திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதுள்ள மத்திய அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி, விவசாயிகள் ஏமாற கூடாது, என்றார். முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்திற்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில், வேளாண் சட்ட மசோதா குறித்து அவர் எவ்வாறு கருத்து சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், உளவுத்துறை அதிகாரிகள் என தனக்கு மிரட்டல் விடுத்ததாக கதிர் ஆனந்த், இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறித்து கேட்ட கேள்விக்கு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும் என்றார்.
இன்னும், 70 நாட்களில் 2ஜி அலைக்கற்றை விசாரணை துவங்க உள்ள சூழலில், தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.