கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோவையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்து இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து அக்டோபர் 1ம் தேதி முதல் பகல் நேர அல்ட்ரா டீலல்ஸ் பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் இருந்து சென்னைக்கு தற்போது மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணி வரை மொத்தம் 8 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே வரும் 1ம் தேதி முதல் சென்னைக்கு பகல் நேர பேருந்து சேவை துவங்கப்படுகிறது.
இதன்படி தினமும் காலை 7 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து புறப்படும். இந்த பேருந்து அவினாசி, பவானி, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தை சென்றடையும்.
அதேபோல், மறு மார்க்கமாக சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு கோவைக்கு இதே வழித்தடத்தில் சொகுசு பேருந்து இயக்கப்படும். இந்த பேருந்தில் பயணம் செய்ய போக்குவரத்து கழக இணையதளம் வழியாகவும், அரசு போக்குவரத்து கழக செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்," என்று தெரிவித்தார்.