கோவையில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.2 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்த அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.2 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்த அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



கோவை மாகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.87க்குட்பட்ட பாரதி நகா்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பயணிகள்‌ நிழற்குடை அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜையினை துவக்கி வைத்தும்‌, பாரதி நகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர்‌ அப்பகுதி மக்களுக்கு நோய்‌ எதா்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகளை வழங்கிய அவர், முதற்கட்டமாக Turif Phase-ll திட்டத்தில் இருந்து பாரதி நகர்‌ பகுதியில்‌ ரூ.34.71 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, பிருந்தாவன்‌ சாக்கிள்‌ தெற்கு பகுதியில்‌ ரூ.41.30 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கான பூமிபூஜையினை அமைச்சா்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



இதனையடுத்து, 93வது வார்டுக்குட்பட்ட திருநாவுக்கரசு நகர்‌ பகுதியில்‌ ரூ.46.47 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாச்சம்பாளையம்‌ பிரதான சாலை மற்றும்‌ நல்லவரத கோனார்‌ வீதி பகுதிகளுக்கு மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நோய்‌ எதாாப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகளை வழங்கினார்.



அதனைத்‌ தொடர்ந்து, Turif திட்டத்திலிருந்து மணிகண்டன்‌ நகர்‌ பகுதியில்‌ ரூ.41.80 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையினையும்‌ ஆகமொத்தம்‌ ரூ.2 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜை செய்து, ரூ.37 இலட்சத்து 90 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சிகளில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலா்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...