விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசை ஏற்படுத்தியுள்ளது - பாஜக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி

கோவை: விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி தெரிவித்தார்.


கோவை: விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி தெரிவித்தார்.

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது, மத்திய அரசின் வேளான் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசிய அவர், விவசாயத்துறையில் இருந்த பெரிய கட்டுப்பாடுகளை பிரதமர் தளர்த்தி உள்ளதாகவும் வேளாண் விளைபொருள் வர்த்தக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகள் ஒப்பந்தம் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் என இரண்டு முக்கிய மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

இதன் மூலம் விவசாயிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று தனது விளை பொருட்களை ஒப்பந்தம் செய்து விற்க முடியும் என்று தெரிவித்த அவர், விவசாயிகள் நேரடியாக நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தனது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசை ஏற்படுத்தியுள்ளது எனவும் விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல, விளைச்சல் வரை முழு உரிமையும் விவசாயிகளிடம் மட்டுமே இருக்கும் எனவும் அதன் மீது பயிர்க்கடன் பெறவும், காப்பீடு செய்யவும் முடியும் என்றவர், விவசாயிகள் நேரடியாக தங்களது லாபத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்றார். இந்த சட்டங்களின் மூலம் மாநில உரிமைகள் நீர்த்துப்போகும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை பாதிக்காது என தெரிவித்த அவர், விவசாயிகளின் நிலம் தொடர்பான எந்த தகவல்களும், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் இடம் பெறாது என்றார்.

மேலும், விவசாயிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எந்த சூழலிலும் ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட பயிர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்கள் விவசாயிகளுடன் போடப்படும் எனவும் அதிக விலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தங்களது விளை பொருட்களை விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் கிசான் ரயில் விவசாயிகளுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் அதன் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விவசாயப் பொருட்களை எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்று கூறினார்.

அதேபோல, சுயசார்பு வேளாண்மைக்கு இந்த சட்டங்கள் துணைபுரிவதாகவும் இந்த ஆண்டில் 3.9 கோடி டன் விவசாய விளைபொருட்கள் மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளன என்றவர், உறை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதாகவும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் பெருமளவு ஒழிக்கப்படுவார்கள் எனவும் இந்த சட்டங்கள் மூலம் விவசாயத்துறை பெருமளவு வளர்ச்சி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...