கோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த தினேஷ்(25) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்த பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தினேஷ் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினேஷ் மீண்டும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...