பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில், 41 வயதான வளர்ப்பு யானை உடல்நல குறைவால் உயிரிழப்பு..!

கோவை: பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில், கல்பனா என்ற 41 வயதான பெண் வளர்ப்பு யானை இன்று உடல் நிலைகுறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில், கல்பனா என்ற 41 வயதான பெண் வளர்ப்பு யானை இன்று உடல் நிலைகுறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை சார்பில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கலீம், மாரியப்பன், கபில்தேவ் ஆகிய யானைகள் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இங்குள்ள பயிற்சி யானைகள், சுற்றுலா பயணிகளை யானை சவாரி அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், டாப்சிலிப்பில் யானை சவாரிக்கு முக்கிய பங்காற்றி வந்தது, கல்பனா என்ற 41 வயதுடைய பெண் யானை. பாகன், பழனிசாமி பராமரிப்பில் இருந்த, கல்பனா என்ற பெண் யானை, கடந்த 2004ம் ஆண்டு சேத்துமடை வனத்தில் இருந்து பிடிக்கப்பட்டு, வனத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, யானை சவாரிக்கு பயன்படுத்தி வரப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த யானை உடல் நல குறைவால், பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கல்பனா யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று அது பரிதாபமாக உயிரிழந்து.



இதையடுத்து, டாப்சிலிப் வனச்சரகர் சக்திவேல், தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் யானை பாகன்கள், உயிரிழந்த யானையின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து, கோவையில் இருந்து, வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவகுழு வரவழைக்கப்பட்டு, உடல்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில், கோழிக்கமுத்தி வனப்பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

10 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை சாவாரி அழைத்து சென்ற, கல்பனா யானை உயிரிழந்ததால், டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...