முழு கொள்ளவை எட்டிய ஆழியார் அணை: 5.மதகுகள் வழியாக வினாடிக்கு 2629 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

கோவை: : பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் ஐந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 2629 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் ஐந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 2629 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வால்பாறை, காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியார் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பொள்ளாச்சி அடுத்துஉள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம், கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.



இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக, வினாடிக்கு 2629 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போதைய, நீர்வரத்து அணைக்கு விநாடிக்கு 5000 கன அடி உள்ளதால், மேலும் நீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஆழியார் அணை பகுதி கரையோரம் உள்ள மக்களுக்கு காவல்துறையும் பொதுப்பணித் துறையும் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க எச்சரித்து வருகின்றனர். தொடர் மழையால், ஆழியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...