கோவை: உருட்டு கட்டையால் தாக்கி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: உருட்டு கட்டையால் தாக்கி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா வாரபட்டி ஊராட்சி கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கசாமி என்பவர் தனது மனைவியுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் கடந்த 7.5.2020 அன்று தனது உறவினர் ஜெகதீசன் என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், ஜெகதீசனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், தங்கவேல், ஜெயபிரகாஷ் ஆகியோர் தன்னை உருட்டு கட்டையால் தாக்கியதில் கால் மற்றும் முதுகு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்க சென்ற தன்னையும், தனது மகன் நாகராஜ் ஆகியோரை செந்தில் வீட்டின் கழிப்பறையில் பூட்டி வைத்தாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கொரோனா தொற்று மற்றும் சிகிச்சை பெற்று வந்ததின் காரணமாக நேரில் சென்று மனு அளிக்க முடியாத காரணமாக தபால் மூலம் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக எந்த நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் 9.7.2020 அன்று சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
மேலும், கருமத்தம்பட்டி கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இல்லை எனவும் ஆட்சேபனை இருந்தால் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் தெரிவிக்கலாம் என அழைப்பானை வழங்கியதை, தன்னால் செல்ல முடியாத காரணத்தால் தனது மகனை அனுப்பியதாக கூறினார்.
அதேபோல, சூலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து எந்த கோப்புகளும் இல்லை எனவும் மாவட்ட நீதிமன்றத்தில் பார்க்க சொன்னதாக ஊழியர்கள் கூறியதாக தெரிவித்தவர், தனது புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தன்னை கொலை வெறி தாக்குதல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தனக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றார்.
மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் துணை காவல் ஆய்வாளர் நாகராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.