கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலும்‌ தூய்மை பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுவீடாக சென்று சேகரிக்கப்பட்டு வரும்‌ குப்பைகளையும்‌, வாகனங்கள்‌ மூலம்‌ சேகரிக்கப்பட்டு வரும்‌ குப்பைகளையும்‌, பீளமேடு மற்றும்‌ உக்கடம்‌ குப்பை இடமாற்றம்‌ செய்யப்படவுள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அக்குப்பைகளை கனரக வாகனங்கள்‌ மூலம்‌ வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகளை தரம்‌ பிரிக்கப்பட்டு, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

மேலும்‌, கோவை மாநகராட்சியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்கள்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌, குப்பை மாற்று நிலையம்‌ ஞாயிற்றுக்கிழமைகளிலும்‌ செயல்பட வேண்டுமெனவும்‌, கூடுதலாக வாகனங்கள்‌ மூலம்‌ குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும்‌, சக்தி சாலையிலுள்ள குப்பை மாற்று நிலையம்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும்‌, வீடுவீடாக சேகரிக்கப்படும்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரிக்கப்பட்டு வாகனங்கள்‌ மூலம்‌ கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல, வணிக வளாகங்களில்‌ மற்றும்‌ கடைகளில்‌ பெறப்படும்‌ மக்கா குப்பைகளை சேகரித்து வாரத்திற்கு ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும்‌. தூய்மை பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ ஒளிரும்‌ சீருடைகள்‌ இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமெனவும்‌, வார்டு வாரியாக உள்ள வீடுகள்‌ மற்றும்‌ குப்பைத்‌ தொட்டிகள்‌ விபரங்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தேவைகளை அறிந்து குறியீடு செய்திட வேண்டுமெனவும்‌, நீர் தேங்கியுள்ள இடங்களில்‌ தூய்மை பணியாளா்கள்‌ மூலம்‌ கொசு மருந்துகள்‌ தெளிக்கப்பட வேண்டும்‌ என்றார்.

மேலும், இறைச்சி மற்றும்‌ கோழி கழிவுகளை தனியாக சேகரிக்கவும்‌, குப்பைகளை சாலைகளில்‌ கொட்ட வேண்டாம்‌ என பெரிய விளம்பர

பலகைகளை அவ்விடத்தில்‌ வைத்திட வேண்டுமெனவும்‌, பொது மக்கள்‌ குப்பைகளை சாலையோரங்களில்‌ கொட்டாமல்‌ குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே கொட்டி சாலைகளை

தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும்‌, சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, நகர்நல அலுவலர்‌ ராஜா, உதவி நிர்வாக பொறியாளர்‌, உதவி பொறியாளர்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...