உங்க ஊரில் உள்ள குளம், குட்டைகளை அடையாளம் காட்ட நீங்க ரெடியா..! நாங்கள் பராமரிக்கிறோம் - கோவை குளங்கள் அமைப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் குறிஞ்சி குளம், சிங்காநல்லூர் குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரிய குளம், வெள்ளலூர் குளம் என பெயர் சொல்லும் குளங்கள் இருக்கிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் குறிஞ்சி குளம், சிங்காநல்லூர் குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரிய குளம், வெள்ளலூர் குளம் என பெயர் சொல்லும் குளங்கள் இருக்கிறது. ஆனால், பெயர் சொல்லாத, நமக்கு அருகில் உள்ள பாரம்பரிய குளம், குட்டைகளை பராமரிக்க தவறி விட்டோம்.

அதன் விளைவாக ஊர்புறங்களில் குப்பை மேடுகளாகவும், ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும் காட்சியளிக்கிறது. ஒரு வேளை நீர்நிலைகளை பராமரித்து இருந்தால் இன்று பிளாட் போட்டு விற்கும் சைட்டுகளாக இல்லாமல் விவசாய நிலங்களாகவும், குடிநீர் பிரச்சினையின்றி நலமான வாழ்வை வாழ்ந்திருப்போம் என்கிறார் கோவை குளங்கள் அமைப்பை சேர்ந்த மணிகண்டன்.



நமது சுற்றுப்புறத்திலும், ஊர்களிலும் உள்ள குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் போதிய பராமரிப்பின்றி இருக்கும். மேலும், அவற்றின் பெயரும் கூட தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனால் நீங்கள் வசிக்கும் பகுதியில், கிராமத்தில், ஊரில் உள்ள குளமோ, குட்டையோ, தடுப்பணை, வாய்க்கால் போன்ற எந்த நீர்நிலை இருந்தாலும் அதன் லொகேஷன் லிங்க் மற்றும் அதன் பெயரை எங்களுக்கு வாட்ஸ் ஆஃப் செய்யலாம் அல்லது புகைப்படம், பஞ்சாயத்தின்/கிராமத்தின் பெயர், பரப்பளவு, நீர் வரும் வாய்க்கால் போன்றவற்றை விவரங்களாக எழுதி எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலையை பற்றிய தகவல்களை திரட்டி அவற்றை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையிடம் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் போன்ற தகவல்களை கேட்டு இருக்கிறோம். அனைத்து நீர்நிலை தரவுகளும் சேர்ந்த பின் கூகுள் மேப் அப்டேட்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் நீங்கள் அனுப்பி வைக்கப்படும் விவரங்கள் மூலமாக குளங்கள், குட்டைகளை நேரடியாக பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். இதன் மூலம் கோவையில் உள்ள நீர்நிலைகளை மீட்டு வளம் பெற செய்வதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்தார்.

குளங்களின் விவரங்களை குறித்து தெரிவிக்க வேண்டிய எண் 9566538905 / [email protected]

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...