கோவையில் கிருஷ்ணம்பதி குளம்‌ மற்றும் குமாரசாமி செல்வம்பதி குளங்கள் புனரமைத்து சீரமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ கிருஷ்ணம்பதி குளம்‌ மற்றும் குமாரசாமி செல்வம்பதி குளங்கள் புனரமைத்து, சீரமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரூ.19.36 கோடி மதிப்பீட்டில்‌ கிருஷ்ணம்பதி குளம்‌, ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குமாரசாமி செல்வம்பதி ஆகிய குளங்கள் புனரமைத்து, சீரமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ குளங்களை சீரமைக்கும்‌ பணிகள்‌ தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றில்‌ மேற்கு மண்டலத்தில்‌ உள்ள கிருஷணம்பதி குளம்‌ மற்றும்‌ குமாரசாமி செல்வம்பதி குளங்களின்‌ கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து சீரமைக்கும் ஆரம்ப பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌, குளத்தை சுற்றிலும்‌ உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும்‌. இயற்கை முறையில்‌ தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய (பெட்‌ லேன்ட்‌) அமைத்தல்‌, மிதிவண்டி பாதை அமைத்தல்‌, உபரிநீர் சிற்றணை அமைத்தல்‌, பூங்காக்கள்‌ அமைத்தல்‌, சிற்றுண்டி உணவகம் அமைத்தல்‌, மிதக்கும்‌ நடைபாதைகள்‌ அமைப்பதற்கான பணிகள்‌, நீர் வழிப்பாதை மேம்படுத்துதல்‌, குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல்‌ ஆகிய பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த தேதிக்குள்‌ செய்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மாநகர செயற்பொறியாளர்கள்‌ மற்றும்‌ உதவி செயற்பொறியாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...