ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்தில் மட்டும் 135 வகையான பறவை இனங்கள் மற்றும் 118 வகையான பட்டாம் பூச்சிகள் இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்தில் மட்டும் 135 வகையான பறவை இனங்கள் மற்றும் 118 வகையான பட்டாம் பூச்சிகள் இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள காப்புக்காடுகளில் கடந்த 12 மற்றும் 13ம் தேதி பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமையில் வன ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு பட்டாம் பூச்சி அமைப்பும் சேர்ந்தவர்கள் என வனத்துறை சார்ந்த 50 பேர் 5 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
அதிக பூக்கள் பூத்து இருக்கக்கூடிய செடி, கொடிகள் வளர்ந்து உள்ள பகுதி, நீர்நிலை உள்ள பகுதிக்கு சென்று பறவைகள், வண்ணத்துப் பூச்சிகளை நேரில் பார்த்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ப்ளூஸ் அண்ட் கிராஸ் பட்டாம் பூச்சிகளின் இனங்களின் இடப்பெயர்வுகள் அதிகம் காணப்பட்டது.
இடம் பெயரும் பருவத்தின் தொடக்கம் காரணமாகவே, பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகளின் கணக்கெடுப்பு முன்னதாக நடத்தப்பட்டது. இதில் Spotted Dove, Malabar Parakeet, Red Spurfowl, Painted Spurfowl, Green Imperial Pigeon, Sirkeer Malkoha, Jungle Nightjar, Crested Treeswift, Barred Buttonquail, Black Eagle, Brown Fish-owl, Indian Grey Hornbill, Rufous Woodpecker, Black-headed Cuckooshrike and Grey Wagtail உட்பட 35 பறவை இனங்களும், Southern Birdwing, Common Jezebel, Dark Wanderer, Glassy Tiger, Rustic, Bamboo Treebrown, Striated Five-ring, Baronet, Long-banded Silverline, Monkey Puzzle, Red Pierrot, Golden Angle and Moore’s Ace உட்பட 118 வகை பட்டாம் பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, நல்ல சீர்தோஷ்ண நிலை நிலவுவதால் பறவைகளின் இடம்பெயர்வு இருப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. பறவை இனங்களில் நீரினை அடிப்படையாக கொண்டு வாழும் 13 வகை இனங்கள் கண்டறியப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் 6 வகையான வேட்டையாடும் பறவை இனங்கள், 6 வகையான ஆந்தை இனங்களும், அறிய வகை பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த வனகோட்டத்தில் மிகுதியாக காணப்படும் பறவை மற்றும் பட்டாம் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.