கோவை: கோவை புலியகுளம் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சிங்காநல்லூர் கிளை சார்பில் நடைபெற்றது.
கோவை: கோவை புலியகுளம் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சிங்காநல்லூர் கிளை சார்பில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டிய சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதை கூறும் வகையில் "அனைவருக்கும் ஊட்டச்சத்து, அதுவே நம் வாழ்வின் சொத்து" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடனம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட குழந்தைகள் கேரட், வெண்டை, போன்ற காய்கறி வகைகள், முருங்கை, பசலை போன்ற கீரை வகைகளை மாலையாக அணிந்து விழிப்புணர்வு நடனமாடினர்.
அதே சமயம், பெட்டி கடைகள், மளிகை கடைகளில் உள்ள தின்பண்டங்களில் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், தேங்காய் பருப்பி போன்ற சத்தான தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ள வலியுறுத்தும் வகையில், பெட்டி கடை, மாதிரி தள்ளுவண்டி ஒன்றை வடிவமைத்திருந்தனர்.
அதில் உடலுக்கு நன்மை பயக்கும் தின்பண்டங்கள், புத்தகங்கள் தொங்க விடப்பட்டு இருந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.