கோவை உக்கடம் பகுதியில் பழைய கட்டிடங்கள் இடிப்பதற்கு கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு..!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அங்கு கடை வைத்து நடத்தும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அங்கு கடை வைத்து நடத்தும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை செல்வபுரம் பகுதியில் சமீபத்தில் பழைய கட்டிடம் இடிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.



அதனை தொடர்ந்து, கோவையில் உள்ள பழைய மற்றும் பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள் உயிர்ச்சேதம் விளைவிக்கும் விதமாக உள்ள கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவு பிறப்பித்தார்.



இந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தை நிர்வகித்து வரும் சரவணகுமார் குடும்பத்திற்கு சொந்தமான கடைகளை சிலர் வாடகைக்கு எடுத்து இருந்தவர்கள் உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.

மேலும், கடைகள் அமைந்துள்ள கட்டிடம் பழமையானது என்பதால் வடகிழக்கு பருவமழையால் கட்டிடம் இடிந்து உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இடத்தின் உரிமையாளர்கள் பழுதான நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்க கோவை மாநகராட்சிக்கு ஒப்புதல் அளித்தனர்.



இந்த நிலையில், இன்று மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன் பழுதடைந்த கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது, அங்கு கடை வைத்து நடத்தி வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் பழுதடைந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...