"எல்லோரும் நம்முடன்" என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை..! கோவையில் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் துவக்கி வைத்தார்!

கோவை: கோவையில் "எல்லோரும் நம்முடன்" என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கையை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் "எல்லோரும் நம்முடன்" என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கையை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் துவக்கி வைத்தார்.



கடந்த 15ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க.,வின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், “எல்லோரும் நம்முடன்” எனும் புதிய இணையவழி உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



இளைஞர்களை சேர்க்கும் வகையிலும் இணையவழி மூலம் எளிதாக உறுப்பினர் சேர்க்கவும் 45 நாட்களில் குறைந்தது 25 இலட்சம் புதிய இணையவழி உறுப்பினர்களை தி.மு.க.வில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிக் கழகங்கள் மற்றும் வட்டங்களில் முகாம்கள் அமைத்து, இணையவழி மூலமாக புதிய இணையவழி உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுவதற்கு களப்பணியாற்ற உள்ளனர். இதனை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக தலைவரின் எல்லோரும் நம்முடன் எனும் புதிய இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், கோவை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முதல் கட்டமாக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். தமிழ் மொழி, இனம் காக்கவும் திமுக தலைவர் கரங்களை வலுப்படுத்த ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாக கூறினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...