கோவையில் இட பற்றாக்குறை காரணமாக வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு தொகுப்புகள்..! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை கரும்புகடையில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதி நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங்கிய கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வந்த கொரோனா தடுப்பு கிட்டுகள் இட பற்றாக்குறை காரணமாக உரிய பாதுகாப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழங்கப்படும் கிட்டுகள் வெளியே வைக்கப்பட்டு உள்ளதால், மழை பெய்தால் கிட்டுகளை மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது, மண் தூசிகள் விழ வாய்ப்பு உள்ளதாகவும், வீணாகி போய் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்த அவர்கள், மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறப்படும் அரசு போதிய இட வசதிகள் செய்து தராததின் காரணமாக வீணாவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...