கோவை: கோவையில் செல்போனை திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(42) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்கு பாளையம் சாலையில் பயணித்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மூன்று வாலிபர்கள், கருணாகரனிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். இவரின் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள், இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இளைஞர்களை பிடிக்க முயன்றபோது பைக்கை ஓட்டி வந்த நபர் மட்டும் சிக்க மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவரில் ஒரு வாலிபர் கார்த்திக்(23) என்பதும் உக்கடம் புல்லுகாடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், கோவை மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், தப்பிச் சென்ற 2 வாலிபர்கள் கார்த்திக்கின் நண்பர்களான சஞ்சை(17), மற்றொருவர் சன்பர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, கார்த்திக் அளித்த தகவலின் பேரில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.