ஆனைமலை அருகே காதலிக்க மறுத்த 11ம் வகுப்பு மாணவியின் முடியை அறுத்து பிளேடால் காயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை அருகே காதலிக்க மறுத்த 11ம் வகுப்பு மாணவியின் முடியை அறுத்து பிளேடால் காயப்படுத்திய தேங்காய் உரிக்கும் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை அருகே காதலிக்க மறுத்த 11ம் வகுப்பு மாணவியின் முடியை அறுத்து பிளேடால் காயப்படுத்திய தேங்காய் உரிக்கும் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி ஆனைமலை அருகே 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த 25 வயது தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், பள்ளி மாணவி அவரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தொடர்ந்து மாணவியை காதலிக்க வாலிபர் வற்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று தனியாக நடந்து வந்த மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, மாணவி பேச மறுத்து சென்றதால், மறைத்து வைத்திருந்த பிளேடை கொண்டு மாணவியின் தலைமுடியை வாலிபர் வெட்டியுள்ளார். அப்போது, மாணவியின் கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் இன்று, கூலித் தொழிலாளியை ஆனைமலை போலீசார் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய செய்துள்ளனர். மேலும், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் தலைமுடியை வாலிபர் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...