மேட்டுப்பாளையம் அருகே காயத்துடன் சுற்றிவந்த 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சேற்றில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் உயிரிழப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சேற்றில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சேற்றில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுண்டபட்டி பீட், நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில், கடந்த மார்ச் மாதம் இடது முன்னங்கால் வீக்கமடைந்து, நடப்பதிற்கு சிரமத்துடன் இருந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வனப் பணியாளர்களால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று யானையின் காலில் உள்ள காயத்தை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை பொடி செய்து உணவு உருண்டைக்குள் வைத்தும், பழங்களுக்குள் வைத்தும் வனப்பகுதியில் அந்த யானை நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டன.

அதேபோல, மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 5 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காட்டு யானையை பார்வையிட்ட மருத்துவ குழுவினர் வன உயிரின காப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால், காட்டு யானை இருக்கும் இடத்தில் மருத்துவம் பார்ப்பது இயலாத காரியம் எனவும் சமவெளி பகுதிக்கு வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளனர். மேலும், சிகிச்சையின் போது எந்த விதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க டாப்ஸ்லிப் மற்றும் சாடிவயலில் இருந்து இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில், யானை மலைப்பாங்கான சமதளமற்ற மற்றும் பாறை நிலப்பரப்பிற்குள் சென்றதால் மயக்க ஊசி செலுத்தினாலும் அது அங்கு நிற்பது கடினம் என்ற காரணத்தினால் சமதள பரப்பிற்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரோந்து பணியை மேற்கொண்ட வேட்டைத்தடுப்பு மற்றும் வன காவலர்கள் நெல்லித்துறையில் இருந்து 3 கிலோ மீட்டர் பகுதியில் ஒரு யானை இறந்திருப்பதை அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். நீலகிரி மற்றும் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மழை பெய்ததால் யானை சேறான பகுதியில் வழுக்கி விழுந்துள்ளது.

இதனிடையே, உடம்பு மற்றும் காலில் உள்ள காயங்களால் அதனால் எழுந்திருக்கவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தோல்பட்டையிலும், அடிவயிற்றில் காயங்களை தவிர ஒரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் தந்தத்தினால் குத்தப்பட்ட காயங்களும் இருந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தெரிவித்தனர். கோவை வனக்கோட்டத்தில் மட்டும் இந்த வருடத்தில் 20 யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், இது முழுக்க முழுக்க வனத்துறையின் மெத்தனத்தால் ஏற்பட்ட இழப்பாகும். அந்த யானைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளித்து இருந்தால் இந்த இழப்பை தடுத்திருக்க இயலும் என்றார்.

யானையை காப்பாற்றுவதற்காக குழு அமைத்து கும்கியை வரவழைத்தனர். ட்ரோன் கேமிரா, கண்காணிப்பு கேமிரா என அனைத்து இருந்தும் காட்டின் தலைமகனை இழந்து நிற்கிறோம். யானைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்து சிறப்பு குழுவினர் விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...