கோவை: கோவை வடிவேலாம் பாளையம் அருகே குடிபோதையில் சொந்த மாமனை டார்ச் லைட்டில் அடித்துக்கொன்ற மருமகனை ஆலாந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ஆலாந்துறை மோலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூச்சி என்கிற தர்மன் கூலித்தொழிலாளி உள்ளார். இவரது அக்கா மகன் ரவி (24) கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் தங்கள் குடும்ப கோவிலில் கெடா வெட்டி வழிபாடு செய்ததாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் தர்மனுக்கு, ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கோவிலில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரவி உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க காருண்யா நகர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வடிவேலாம் பாளையம் அருகே வரும் போது மாமன் தர்மனை பார்த்துள்ளார்.
அப்போது, பேசிக்கொண்டிருந்த இருவரும் அருகே உள்ள காட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர். அச்சமயம் மீண்டும் கோவிலில் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ரவி கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் தர்மனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். படுகாயங்களுடன் கிடந்த தர்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேலப்பாளையம் வீட்டின் அருகே பதுங்கி இருந்த ரவியை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் செய்வது அறியாது மாமனை மருமகன் அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.