கோவை: கோவையில் நண்பர் உதவியுடன் கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் நண்பர் உதவியுடன் கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை டாடாபாத் 9வது வீதியை சேர்ந்தவர் ஜாய்(எ) ஜார்ஜ் கண்மணி நோயல். இவர், இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது நண்பர்களான விளாங்குறிச்சி, பகுதியை சேர்ந்த கவிதா மற்றும் அவரது கணவர் மதன் பிரபுவிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது, பணத்தை வாங்கிவிட்டு காரில் அமர்ந்தபடி, நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்த ஜோய்யை, கையில் கத்தியுடன் வந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், நிலை குலைந்த, ஜோய் காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார்.

இறந்தபோது, விடாமல் அந்த மர்ம நபர்கள் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில், பலத்த காயமடைந்த ஜோயின் அலறல் கேட்டு, பொதுமக்கள் கூடியதையடுத்து இரு சக்கர வாகனத்தில் மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். இதில் உடலின் பல்வேறு இடங்களில் கத்தி குத்து பட்ட ஜோயை மீட்ட கவிதா-மதன்பிரபு தம்பதியினர், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த கொலை தாக்குதல், குறித்து வழக்கு பதிவு செய்த கோவை பி2 ஆர்.எஸ்.புரம் போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது குறித்து, சிகிச்சை பெற்று வந்த ஜோயிடம் விசாரணை மேற்கொண்டபோலீசாரிடம் வாக்குமூலம் அளித்த ஜோய், அவர் இன்டீரியர் டெக்ரேசன் தவிர்த்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும், அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர் உள்ள நிலையில், பீளமேடு பகுதியில் வசித்து வரும் மதன்பிரபு மற்றும் கவிதா தம்பதியினருக்கு பணம் கொடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
அவரது, வாடிக்கையாளரான கவிதாவின் பரிந்துரையின் பேரில் சூலூர், ஞானம்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜா என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் கடனாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி பணத்தை திரும்ப பெற கவிதா வீட்டுக்கு சென்ற ஜோய் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து, 14ம் தேதி பணம் தருவதாக கவிதா கூறியதை தொடர்ந்து, ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சென்றவர், இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பெற்று கவிதா-மதன்பிரவுவிடம் பெற்று கொண்டு அவர்களிடம் காரில் அமர்ந்த படி பேசி கொண்டிருந்ததாக, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக காரின் பின்புறம் மறைந்து இருந்த மர்ம நபர்கள் தன்னை கத்தியால் சரமாரியாக தாக்கியதாகவும், அவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும், என விசாரணையின் போது ஜோய் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வழக்கை விசாரித்த வந்த போலீசாரின் விசாரணையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது கவிதா-மதன்பிரபு என்பதும் ஜோயை கொலை செய்ய முயற்சித்தது, ஞானம்பாடியை சேர்ந்த கவிதாவின் நண்பர் பிரதீப் ராஜா என்பதும், அவருக்கு உதவியது அவரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணம், கொடுக்கல் வாங்கல் காரணமாக திட்டம் தீட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.