கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை; ஒருவர் பலி

கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை; ஒருவர் பலி.

கோவை: கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கல்பெகு (24) அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கோவை ராமநாதபுரம் அருகே ராமலிங்க ஜோதி நகரில் வசித்து வரும் இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே, இவர் கடந்த 6 மாத காலமாக பேஸ்புக் மூலம் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 10 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இதற்கு அவர்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்தை தொடர்ந்து, பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியை சந்தித்து வந்துள்ளனர். இதனால், தம்பதிகள் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், அக்கல்பெகு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அதிர்ஷ்ட வசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...