தனியார் வங்கிகள் கடனை வசூலிக்க தரக்குறைவாக பேசுவதாக கூறி வங்கி ஊழியர்களை சிறைப்பிடித்த பெண்கள்

நீலகிரி: உதகை காந்தள் பகுதியில் தனியார் வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்களை அப்பகுதி சுயஉதவி குழுவினர் சிறைப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: உதகை காந்தள் பகுதியில் தனியார் வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்களை அப்பகுதி சுயஉதவி குழுவினர் சிறைப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் குழுக்கள், தனியார் வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் கம்பனிகளிடம் பல மகளிர் கடன் பெற்றுள்ளனர். இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறை கட்டுபாட்டில் உள்ள பூங்காக்களை தவிர மற்ற சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுமாறு உதகை, காந்தள் பகுதிகளில் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும், இரவு வரையிலும் பணம் தரும்படி தொந்தரவு செய்து வருவதாக, கூறி இன்று பணம் வசூலிக்க வந்த வங்கி ஊழியர்களை, அப்பகுதி பெண்கள் சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கொரோனா நோய் தொற்றால் சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதால், பணம் செலுத்த 2 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும், என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, நாளை வங்கி மேலாளர் மற்றும் கடன் வாங்கியுள்ள பெண்கள் காவல் நிலையத்திற்கு வருமாறும், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...