ஆழியார் அணை புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க உடன்பாடு; விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: ஆழியார் அணை புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க, அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: ஆழியார் அணை புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க, அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இதில், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் வழியாக 22 ஆயிரத்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.



நடப்பாண்டிற்கான, தண்ணீர் திறந்து விடுவது குறித்து பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.



சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள பொள்ளாச்சி கால்வாய், சேத்துமடை கால்வாய், பீடர் கால்வாய் மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாக வருகிற அக்டோபர் 7ஆம் தேதி முதல் 2560 மில்லியன் கன அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடுவது, என உடன்பாடு ஏற்பட்டது,

வரும் 7 ஆம் தேதி தண்ணீர் திறந்து விட உள்ள நிலையில், கால்வாய் பகுதியில் செடிகளையும், முள்புதர்களை அகற்றி, நீர் வழிப்பாதையை சுத்தம் செய்ய வேண்டும், என பொதுப்பணிதுறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று, ஏற்பட்டுள்ள உடன்பாடு அவர்களுக்கு மகிழ்ச்சி அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...