திருப்பூர்: தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக் கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் வீட்டின் முன்பு கூடி கண்டனம் தெரிவிப்போம், என திருப்பூரில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒ.டி.டி யில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு, எனவும் அப்போது கருத்து தெரிவித்தனர்.
சமீபத்தில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் ஒன்று, பாரதிராஜா தலைமையில், செப்., 14 சென்னையில் துவங்கப்பட்டது. அந்த நிகழ்வின்போது "எங்களிடம் இருக்கும் 100 தயாரிப்பாளர்கள் வலுவானவர்கள், மற்றவர்கள் நோஞ்சான்கள்'' என்கிற தொணியில் பாரதிராஜா செய்தியாளர் சந்திப்பின் போது பேசியுள்ளார்.
அவருடைய சர்ச்சையான கருத்தை கண்டித்து, தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நமக்கு நாமே அணியினர், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பாரதிராஜா நோஞ்சான் என தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும், மேலும், அவர் பேசியதற்கான விளக்கம் என டிவிட்டர் பதிவில் அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு, செயலற்ற நிலையில், திரியும், தயாரிப்பாளர்களின் அவல நிலை, கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைகள், அவை என மேலும் தரக்குறைவாக பேசி உள்ளதாகவும், தெரிவித்தனர்.
எனவே, இதற்கு பாரதிராஜா உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு கூடி கண்டனத்தை தெரிவிப்போம், என தெரிவித்தனர்.
மேலும், சங்கம் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும், தயாரிப்பாளர்களுக்கு நன்மைகள் ஏதும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஒ.டி.டி யில் படங்கள் திரையிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு, என்று தெரிவித்தனர்.