கோவை சிங்காநல்லூர் அருகே வாடகை பணம் வாங்க கூடாது என அடித்து துன்புறுத்தும் மகன்..! வயதான தம்பதியினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார்!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே வாடகை பணம் வாங்க கூடாது என மகன் அடித்து துன்புறுத்துவதாக வயதான தம்பதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே வாடகை பணம் வாங்கக் கூடாது என மகன் அடித்து துன்புறுத்துவதாக வயதான தம்பதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



கோவை சிங்காநல்லூர் ராமானுஜ நகர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் லட்சுமி (80) மற்றும் அவரது கணவர் தாமோதரசாமி ஆகியோர் தங்களது ஐந்தாவது மகன் கார்த்திகேயன் பூர்வீக நிலத்தில் கிடைக்கப் பெறும் வாடகையை இனி வாங்கக் கூடாது என கூறி தொடர்ந்து அடித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



இது குறித்து லட்சுமி பாட்டி கூறுகையில், தங்களுக்கு ஐந்து மகன் மற்றும் ஒரு மகள் உள்ளதாகவும் அதில் மூன்று மகன்கள் இறந்து போனதாகவும் தற்போது ஐந்தாவது மகன் மற்றும் மகளும் உயிருடன் இருப்பதாக தெரிவித்த அவர், பூர்வீக நிலத்தில் இருந்து கிடைக்கப் பெறும் வாடகை வருமானத்தை கொண்டு ஜீவனாம்சம் செய்து வருவதாக கூறினார்.

இந்நிலையில், தனது மகன் கார்த்திகேயன் நிலத்தில் கிடைக்கப் பெறும் வாடகையை இனி நீங்கள் பெற கூடாது என கூறி இருவரையும் தொடர்ந்து அடிப்பதாக கூறிய அவர், கணவரை மகன் கண்மூடித்தனமாக தாக்கியதால் தோள்பட்டை முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், தற்போது வாடகை பணத்தை கார்த்திகேயனே பெற்றுக் கொள்வதால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அவதிப்பட்டு வருவதாகவும் தாய், தந்தை என்றும் பாராமல் மோசமான வார்த்தைகளால் பேசுவதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு மகன் கொண்டு சென்றுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

ஆகவே, தொடர்ந்து தங்களை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதியவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...