கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்மணி தனது பள்ளி ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாகவும் உடனடியாக அதனை பெற்று தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து வித்யா கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிறிஸ்த்துநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்ததாகவும் ஒரு வருடம் அங்கு படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்தியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் மூத்த மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது கணவர் நவீன்குமார் பெயிண்டிங் வேலைக்கு செல்லும் காரணத்தால் போதிய வருமானமின்றி தவிப்பதால் தானும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று அவருக்கு உதவிட எண்ணியதாக கூறிய அவர், இதற்காக தனது பள்ளி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது மூன்றாம் ஆண்டு பருவ தேர்வுக்கு செலுத்த வேண்டிய 11,000 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு சான்றிதழ்களை பெற்று கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் கூறியதாக தெரிவித்தார்.

தற்போது இரண்டாவதாக நான்கு மாதமே ஆன குழந்தை உள்ள நிலையில் போதிய வருமானமின்றி தவிப்பதாலும் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு செல்லும் இடங்களில் சான்றிதழ்களை நிர்வாக தரப்பினர் கேட்பதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சான்றிதழ்களை தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.