கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் நேற்று இரவு மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் நேற்று இரவு மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



நஞ்சுந்தாபுரத்தில் உள்ள தேவேந்திர வீதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில், நேற்று இரவு பலத்த  காற்று வீசிய நிலையில், தீடீரென குடியிருப்பில் பகுதி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் இடையே உரசல் ஏற்பட்டு,  குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் தீப்பிடித்தது.  

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.  

அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, ஒயர்களை சரி செய்தனர். இதையடுத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...