திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுக்காத காரணத்தால் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதை நிறுத்த கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30). பட்டதாரியான இவருக்கும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், திருமண சீர் வரிசையாக சுகன்யாவின் குடும்பத்தினர் 10 பவுன் நகையுடன் அனுப்பிய நிலையில், செல்வராஜின் தாயார் ரங்கநாயகி மேலும் 15 பவுன் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இதனால் செல்வராஜோடு சேர்ந்து வாழ முடியாத வகையில் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்ததோடு தற்போது அவர்கள் கேட்ட வரதட்சனையை கொடுக்காத சூழலை சுட்டிக்காட்டி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சுகன்யா, கனவரோடு சேர்த்து வைக்க கோரி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மனு அளித்தார்.