கொரோனா பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுரை

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெங்கு தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்பட வில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென 10க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகளையும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வந்தனர். விரைவில் வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில் கொரோனாவுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்தில் கொரோனா பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி டெங்கு பாதிப்பும் உள்ளதா என்பதை கண்டறியப்படும். மேலும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மாடிகளிலும், வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் டிரம்கள் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்தி மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...