கோவையில் சுகாதார துறை சார்பில் வழங்கப்படும் மருந்துகளை அதிமுக வினர் கொண்டு விநியோகம் செய்யாமல், நியாய விலை கடை மூலம் வழங்க வேண்டும் - நா.கார்த்திக் எம் எல் ஏ

கோவை: கோவையில், சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக, நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று தடுப்புக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், அதிமுக வினர் மூலம் விநியோகிக்காமல் நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும், என்று திமுக மாவட்ட பொறுப்பாளர், நா.கார்த்திக் எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில், சுகாதார துறை சார்பில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், அதிமுக வினர் மூலம் விநியோகிக்காமல், நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும், என்று திமுக மாவட்ட பொறுப்பாளர், நா.கார்த்திக் எம் எல் ஏ தெரிவித்துள்ளார். 

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: 

கோவையில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இது சம்பந்தமாக கோவையில், சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக, அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மக்களுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் கொரோனா தொற்று சம்பந்தபட்ட மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும், நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் மாத்திரைகளை வழங்காமல், அதிமுக வினர் தங்கள் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று, இந்த மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்து வருகின்றனர். இதன் மூலம், சுகாதாரத்துறை சார்பில் கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் மாத்திரைககளை, ஏதோ அதிமுக வினர் தங்கள் சொந்த பணத்தில் வழங்குவது போல வழங்கி நாடகமாடி வருகின்றனர்.

எந்தந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல், இந்த மருந்து – மாத்திரைகள் விநியோகத்தை, அதிமுக சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்தி, இந்த பேரிடர் காலத்திலும், ஆளும் அ.தி.மு.க. அருவருப்பான அரசியல் செய்கிறது. இந்த செயலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு கொடுப்பது, மக்களின் வரிப்பணம். இது ஏதோ அ.தி.மு.க.வினர், ஒட்டு வாங்க ஒட்டுக்கு பணம் கொடுத்தது போல், களத்தில் இறங்கி, சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.

கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் , கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறகூட முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதற்கெல்லாம், நடவடிக்கை எடுத்து உதவ முடியாத, அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை, மக்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர். விரைவில், மக்கள் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, கோவையில் சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட மருந்து – மாத்திரைகள் விநியோகம், ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், என்று அந்த அறிக்கையில் நா.கார்த்திக் எம் எல் ஏ தெரிவித்துள்ளார். 

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...