ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மகாளய அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது - கோயில் நிர்வாகம்

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மகாளய அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மகாளய அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில், குறிப்பாக அமாவாசை தினத்தன்று, இரவு கோயில் நடை திறந்திருப்பது வழக்கம்.



வரும் 16ம் தேதி புதன்கிழமை இரவு, 7:26 மணி முதல், 17ம் தேதி வியாழக்கிழமை மாலை, 5:24 மணி வரை இந்த மாதத்திற்கான அமாவாசை நடக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக, கோயில் நடை திறக்கப்படாது என, மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவுப்படி, கொரோனா தொற்று காரணமாக இந்த முறை மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசையன்று இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை மூடப்படும். வழக்கம்போல் காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மட்டுமே, அம்மனை தரிசிக்க முடியும். மேலும் பக்தர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும், கட்டாயம் சமூக விலககளை கடைபிடிக்க வேண்டும், என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



இந்நிலையில், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...