கோவையில் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பி.ஏ பட்டதாரி உட்பட இருவர் கைது; தனிப்படை போலீசாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு..!

கோவை: கோவையில் கடந்த அக்டோபர் மாதம் ஜி.என்.மில் பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: கோவையில் கடந்த அக்டோபர் மாதம் ஜி.என்.மில் பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கவுண்டம்பாளையம்,தடாகம் ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்றது.

மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் குறித்த விபரங்கள் கிடைக்க பெறாத நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கபட்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.

தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில், சம்பவ இடங்களில் கிடைக்க பெற்ற தடையங்கள் அடிப்படையிலும், தண்டனை பெற்று சிறைக்கு சென்று திரும்பிய கைதிகளின் விவரங்களின் சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், பழைய குற்றவாளிகளான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தி (எ) நந்தகுமார் ஆகியோருக்கு கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்து.

இதனையடுத்து, தனிப்படையினர் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில்,கோவை இடையார் பாளையம் பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பில், மேற்கண்ட இரு குற்றவாளிகளையும் கைது செய்த தனிப்படையினர், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

மேற்கொண்டனர்.

விசாரணையில், இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தது ஒப்பு கொண்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் பி.ஏ லிட்ரேச்சர் பயின்ற பட்டதாரி ஆவார், ஆசிரியர் பயிற்சியும் பெற்ற இவர் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் எடுத்து வந்து உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இவர் மீது கோவை, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் ஒன்பதற்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும், கோவை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் 2015 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த 150 சவரன் வழிபறி கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கபட்ட 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டு, இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கபட்டனர். மேலும், சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம், என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக, நடைபெற்று வந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த கோவை மாவட்ட தனிபடையினரை மாவட்டா கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டினார்.

Newsletter

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...