கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை!

கோவை: கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலையாளியை, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முட்செடி மற்றும் செடிகள் அதிகம் வளர்ந்த நிலையில் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வருவதை கண்டு நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில் என்ற ஊழியர் ஆதியப்பன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்த இறந்தாரா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...