திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது இதற்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றுக்கு மத்தியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும், மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனை நிர்வாகம் கட்டிடங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



இதையடுத்து, ஒப்படைக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் புதிதாக வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். புதிய கட்டிடங்களை கட்ட, பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...