கோவை பீளமேடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் மேற்கூரை அமைக்க கோரிக்கை

கோவை: கோவை பீளமேடு அருகே மாநகராட்சியின் 38வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் மேற்கூரையும், இருக்கை வசதியும், செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை பீளமேடு அருகே மாநகராட்சியின் 38வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் மேற்கூரையும், இருக்கை வசதியும், செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த சுகாதார நிலையத்திற்கு ஏ.டி காலனி, கடல் ரோடு, தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதி, நேரு நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பல்வேறு விதமான சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கும் வந்து செல்கின்றனர். 



இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பான சிகிச்சை முறை அளிக்கப்படுவதால், இதனை சுற்றி உள்ள பொதுமக்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கேயே வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து ம.தி.மு.க பீளமேடு பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில்: 

ஒரே நேரத்தில், இந்த சுகாதார நிலையத்தில், ஐந்து நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க இடவசதி உள்ளது. அறையின் வெளியே போதுமான இடவசதி உள்ள போதிலும், அங்கு மேற்கூரை வசதி, இருப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 



இதனால் மருத்துவத்திற்காக, வரும் பொதுமக்கள் வெயில், மழையில் நின்று காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் வெயிலில் வந்து நின்று செல்லும் போது, சில நேரங்களில் மயக்கமடைந்து கீழே விழும் சூழலும் ஏற்படுகிறது. 



எனவே, காலியாக உள்ள இடத்தில் உடனடியாக மேற்கூரை அமைத்து தர வேண்டும். மேலும், இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக அமைத்துத் தந்தால் அப்பகுதி மக்கள் பயனடைவார்கள், என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...