பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற இடைத்தரகர் உள்ளிட்ட 3 பேர் கைது..!

பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை 80 ஆயிரம்  ரூபாய்க்கு விற்பனை பெண் இடைத்தரகர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை 80 ஆயிரம்ரூபாய்க்கு விற்பனை பெண் இடைத்தரகர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தைசேர்ந்த ராஜேஷ்குமார், இவரது மனைவி கோகிலா இவர்களுக்கு திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், தங்களுக்கு குழந்தை வேண்டும் என்று இவரது தோழியான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புலியங்கண்டியை சேர்ந்த பெளலினா என்ற பெண்ணை அணுகியுள்ளனர். 

அதே சமயம், அங்கலக்குறிச்சியை சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகவேல், சுதா தம்பதியினருக்குகடந்த 20 நாட்களுக்கு முன்புஆண் குழந்தை பிறந்தது. இதை தெரிந்து கொண்ட பெளலினா அவர்களை தொடர்பு கொண்டு, குழந்தையை விற்றால் ரூபாய் 80,000கொடுப்பதாக கூறியுள்ளார். 

பின்னர், ராஜேஷ்குமார், கோகிலா, பெளலினா மூவரும் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி கொண்டு சென்று விட்டனர். 

இது குறித்துஅக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். 

இதனையடுத்து அதிகாரிகள், ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குழந்தையை விலைக்கு வாங்கிய ராஜேஷ்குமார் அவரது மனைவி கோகிலா மற்றும் இடைத்தரகராக இருந்த பெளலினாஉள்ளிட்ட 3 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தையை விற்பனை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...