வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பட்டாம் பூச்சி காதலர்களால் கொண்டாடப்படும் பட்டாம் பூச்சிகள் பெருவிழா..!

கோவை: இந்தியாவில் பெரிய பட்டாம் பூச்சி திருவிழா செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாம் பூச்சி காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.



கோவை: இந்தியாவில் பெரிய பட்டாம் பூச்சி திருவிழா செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாம் பூச்சி காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஒட்டு மொத்த முயற்சியின் ஒரு பகுதியாக சேலம் நேச்சுரல் சொசைட்டி, ROAR, Act for butterflies பாண்டிச்சேரி இயற்கை மற்றும் வனவிலங்கு மன்றம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் பட்டாம் பூச்சி சார்ந்து பல்வேறு நிகழ்வுகளை வழங்க உள்ளது .

தமிழகத்தில் உள்ள மலைத்தொடர்கள், இங்குள்ள சீர்தோஷ்ண நிலை போன்றவை 324 வகையான பட்டாம் பூச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. சுற்றுச்சூழலில் பெரிதும் உதவியாக உள்ள பட்டாம் பூச்சிகள் தாவரங்களுக்கிடையே உள்ள பரிமாணத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவியாக இருந்து அடர்ந்த காட்டினை உருவாக்கும் சுற்றுச்சூழல் காரணிகள் அவை. ஒரு இடத்தில் பட்டாம் பூச்சிகள் மற்றும் பறவைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பின் அது வளமான பகுதி என்று கூறுவர்.

ஆனால், சில காலமாக அவற்றின் வாழ்விடம் அழிப்பு, அதிகளவு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து, மக்கள் தொகை, மனித இடர்பாடுகள் என பல்வேறு பிரச்சனைகளால் பட்டாம் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வெகுவாக குறைந்து வரும் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை மனித குலத்திற்கு எதிரானவை ஆகும்.

மேலும், உயிர் வாழ சூழ்நிலை அழிக்கப்பட்டதன் நோக்கம் அவற்றின் வாழ்க்கை போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போது உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் காலநிலையும் வானிலையும் கணிக்க முடியாத இடத்தில் உள்ளோம். எப்போது மழை பெய்யும்? எப்போது அதிக வெயில் அடிக்கும் என கண்டறியும் திறனை இழந்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே என்று கூறப்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாப்பது மட்டும் நம் கடமையல்ல சின்ன சின்ன உயிரிகளை காப்பாற்றுவதும் நம் கடமையே ஆகும்.

இந்த நிலையில், இதனை விழிப்புணர்வு செய்யும் விதமாக செப்டம்பர் மாதத்தில் பட்டாம் பூச்சி பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புகைப்பட போட்டி, வீடியோகிராஃபி, தமிழ் ஆங்கிலம் கவிதை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா, பட்டாம் பூச்சிகள் எண்ணிக்கை என 38 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இது மட்டும் இல்லாமல் இலவசமாக நிபுணர்களின் கலந்துரையாடல், ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி என வழங்க இருக்கிறார்கள்..

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள https://www.aeonct.org/big-butterfly-month-2020/

contact Ph: 98435 11233 or [email protected].



Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...