நாக்கு சிதறிய நிலையில் கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை பரிதாபமாக இறந்தது..!

அவுட்டுக்காயால் நாக்கு பகுதி மிகவும் சிதறி, தாடை கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு உண்ண முடியாமல் கோவை மற்றும் கேரள வனப்பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானை, இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.


கோவை: அவுட்டுக்காயால் நாக்கு பகுதி மிகவும் சிதறி, தாடை கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு உண்ண முடியாமல் கோவை மற்றும் கேரள வனப்பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானை, இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.



'புல்டோசர்'என்ற அனைவராலும் அளிக்கப்பட்ட அந்த யானை, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கோவை மருதமலை பகுதியில் அவுட்டு காய் வாயில் வெடித்ததால், நாக்கு சிதறிய நிலையில் மிகுந்த வலியுடன், கோவை வனத்துறையினரால் கண்டறியப்பட்டது.

பாதிக்கபட்ட யானைக்கு, சிகிச்சை அளிக்க முயன்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆணைக்கட்டி வழியாக கேரளா பகுதிக்கு சென்று விட்டது. பின், மன்னார்காடு பகுதியில் வனத்துறையின் சார்பாக சிகிச்சை அளித்த போதும், அந்த யானை நீண்ட காலம் உயிர்வாழாது மற்றும் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்களால் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.



இந்த நிலையில், கோவை மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டி அந்த யானை தொடர்ந்து வலியில் திரிந்து வந்த நிலையில், இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் உயிரிழந்தது.

கேரள பகுதியில் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட, அந்த யானையின் சடலத்திற்கு அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள், அவர்கள் முறைப்படி, பூ, பழம் போன்றவற்றை படைத்து, அந்த யானைக்கு பிரியாவிடை அளித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...