வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

கோவை: வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை மரணம் அடைந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை மரணம் அடைந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை ஒன்று இறந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வாட்டர்பால் தேயிலைத் தோட்டப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



பின்னர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன், மணிகண்டன், வனவர் முனியாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையின் சிறப்பு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலில் உடல்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, யானையின் முக்கிய பாகங்கள் வனத்துறை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இறந்தது ஆண் யானை என்றும் வயது 30 லிருந்து 35 க்குள் இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். உடல்கூறு ஆய்வுக்குப் பின் இறந்த யானையின் உடல் அங்கேயே புதைக்கப்படுகிறது.காட்டு யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நேற்று மதியம் வாட்டர் பால் இடைச்சோலைப் பகுதியில் காட்டு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதில் ஒரு யானைக்கு தும்பிக்கை மற்றும் தந்தம் பகுதியில் ரத்தம் வடிய வடிய வனப்பகுதிக்குள் சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...